இசைக்கு அசையும் இனிய கலையென இறைவன் காட்டிய எழில்மிகு நடனம்! அசைவில் சொல்லும் அபிநய காட்சி ஆடிடும் போது அழகிய வதனம்! திசைகள் தோறும் நாட்டிய கலைகள் தமிழர் கூத்தை தந்திடும் புவனம்! பண்ணிசை.....
எமது தாய் தந்தையரின் திருப்பாதங்களை வணங்கி. எமது அன்பு புதல்விகள் சகானா, சாருகா இருவரும் சிறு வயதில் நடன கலையின் மீது கொண்ட ஆசை. பல்வேறு பரிணாம வளர்ச்சியினூடாக இன்று அரங்கப்பிரவேசத்தை எட்டியுள்ளது.....
ஆடல் அரசன் நடராஜ பெருமானின் பொற்பாதங்களை வணங்கி , எனது பெற்றோரை பணிந்து எனக்கு இப் பரதக் கலையினை பயிற்றுவித்த குருவினர்களை மனதில் நிறுத்தி, அவர் தம் பாதம் பணிகின்றேன். புலம்பெயர் நாடான சுவிட்சர்லாந்து நாட்டில் பரததர்சனா நடனாலயத்தினை ஆரம்பிக்கும் போது செல்வி துஷாந்தி லிங்கதாஸ் 5 வயது சிறுமியாக என்னிடம்.....
அறிவென்னும் விளக்கேற்றி! அன்பெனும் வழிகாட்டி ! சந்தனத் தென்றலாய் வலம் வந்து - குளிர் நிலவின் ஒளி கொண்டு கனியமுத மொழியோடு கனிவான சிரிப்போடு நடனம் தனைப் போதிக்கும் எங்கள் மதிப்பிற்குரிய ஆசிரியைக்கு வணக்கங்கள். ஆய கலைகளின் அழகியற்கலையை கசடறக் கற்று நாம் அசடு அறச் செய்வதற்காய் சிதையாமல் எம்மைச் சிலையாக..…
சுவிஸ்லாந்து நாட்டில் பரததர்சனா நடனாலயத்தின் இயக்குனர் திருமதி காயத்திரி திஷாந்தன் அவர்களிடம் செவ்வனவே நடனம் பயின்று வரும் செல்வி. துஷாந்தி லிங்கதாஸ், செல்வி. சகானா குலேந்திரநாதன், செல்வி. சாருகா குலேந்திரநாதன் இவர்கள் ....
தமிழர் போற்றும் ஆலய வழிபாட்டு கலையாகிய, பரதம் தொன்மையும், சிறப்பும் நிறைந்த சாஸ்திரக்கலையாகும். இக்கலை எமது கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை, பிரதிபலத்துக் காட்டும் கண்ணாடியாக, உலகெங்கும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.....
தொன்று தொட்டு வளர்ந்து விளங்கி வரும் கலைகளுள் சிறந்ததாக விளங்குவது ஆடற்கலையாகும். மன உணர்வுகளை வெளிப்படுத்த கை, கால், உடல் அசைவுகள் பயன் படுத்தப்பட்டன. இவ் அசைவுகள் கலை வடிவத்தோடு வெளிப்படுத்தப்படும்போது.....
ஐந்தொழிலையும் ஒருங்கே இயக்கும் ஆடலரசன் தில்லைக்கூத்தப்பெருமான் மகிழ்ந்து ஆடும்கலை பரதக்கலையாகும். இதனைச் செவ்வனே குரு ஸ்ரீமதி காயத்திரி திஷாந்தனிடம் அடிபணிந்து கற்று 18.6.2023 இன்று அரங்கேறும் செல்வி துஷாந்தி லிங்கதாஸ்.....
பரத நாட்டியக்கலை என்பது ஒரு தெய்வீகக் கலையாகப் போற்றப்படுகின்றது. ஆடற்கலையின் தலைவனாக விளங்கும் நடராஜப் பெருமானின் திருப்பாதங்களில் இருந்து தோன்றியதே இக்கலை வடிவம். மனிதன் பேசத்தெரியுமுன்பே முகக்குறி.....
திரு திருமதி லிங்கதாஸ் தம்பதிகளின் மகளும் கடந்த 19 வருடங்களாக நடனக் கலையைக் கற்கும் பரததர்ஷனா நடன ஆலய ஆசிரியர் திருமதி காயத்ரி திசாந்தன் அவர்களுடைய மாணவியுமான துஷாந்தி அவர்களும், திரு திருமதி குலேந்திர நாதன் தம்பதிகளின்.....
உன் கலை நிலைக்கட்டும் இப்புவியில் நின் புகழ் ஒலிக்கட்டும் உலகோர் செவியில் பரதம் ஒரு தவம் அது இறைவன் வலம் வரும் ரதம் - நீ தவம் செய்த பரததர்சனா பொற்சதங்கை அணியும் உன் மாணவிகளின் பாதம் - அதன்.....
ஆதியும் அந்தமுமில்லா அரன் திருநாமம் போற்றியு ணர்ந்து சோதிக் கனல் புயல் கேசம் படர் பஞ்ச கிருத்திய நடன கோலம் நீதி கொள் நெறிகுரு காயத்திரி திஷாந்தன் குருவென வந்தமைந்த ஈடில்லா பரததர்சனா நடனாலயம்......
பழுத்த பழங்கள் நிறைந்த மரத்தை பறவைகள் தேடிவரும். இனித்த கரும்பை கடித்து சுவைக்க எறும்புகள் ஓடிவரும். கலை ஞானம் நிறைந்த குருவிடம் மாணவர் கலை கற்றிட விரும்பி வருவர். நிலைத்த புகழை நிச்சயம் பெற்று......
சுந்தரத் தமிழ் எடுத்து சுவிஸ்லாந்தில் பரதக்கலை பயின்று இன்று அரங்கம் காணும் பெருமை தரும் செய்திகளைத் தந்திட்ட பேத்திகளே! சகானா,சாருகா. ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, பல் கலையும், கல்வியும் கற்று .....
மனித சமூகத்தை தனித்துவப்படுத்துவதில் பண்பாடு மிகவும் முக்கியமானது. தனிமனித ஆளுமை உலகை செதுக்குவதிலும், சமூகமாக கூட்டுப் பண்பாட்டுச் செறிவை செதுக்குவதிலும் கலைகள் அடிப்படைப்பங்காற்றுகின்றன..
தெய்வீகக் கலையாம் நாட்டியக்கலை. இது பிரமதேவனால் படைக்கப்பட்ட ஐந்தாம் வேதமாக புகழப்படுகின்றது. இக் கலையை முறைப்படி பயின்று. புலம்பெயர் தேசமான சுவிஸ்சர்லாந்து நாட்டிலும் கலைப்பயணம்.....
திருமதி. காயத்திரி திஷாந்தன்
திரு. கோபாலகிருஸ்ணன் சிறிகாந்
திரு. பரமேஸ்வரலிங்கம் பிரசாத்
திரு. முத்துக்கிருஸ்ணன் தனம்ஜெயன்
திரு. கிருஸ்ணன் முருகன்
திரு. கார்த்திகேசு கலைஅழகன்
செல்வி. ஜவீனா விஜயகுமார்