இசைக்கு அசையும் இனிய கலையென இறைவன் காட்டிய எழில்மிகு நடனம்! அசைவில் சொல்லும் அபிநய காட்சி ஆடிடும் போது அழகிய வதனம்! திசைகள் தோறும் நாட்டிய கலைகள் தமிழர் கூத்தை தந்திடும் புவனம்! பண்ணிசை மீட்டிட பாதங்கள் ஆடிட பண்பாட்டுக் கோலம் பார்த்திடும் பரத அரங்கு.
செம் மொழியாகிய தமிழ் மொழியும் அதன் நீண்டிருக்கும் பண்பாடும் கலாச்சாரமும் உலகத்தார் கண்டு வியக்கும் அதிசயமாகும். எங்கள் மகள் துஷாந்தி. கலையின் மீது கொண்ட ஆர்வத்தினால் 2004 ம் ஆண்டு துஷாந்தியின் 5 வது வயதில் ஆசிரியை திருமதி காயத்திரி திஷாந்தன் அவர்களிடத்தில் நடனம் பயில தொடங்கினார்.
நடனக் கலையை மிகவும் ஆர்வத்தோடும்,விருப்போடும், உற்சாகத்தோடும் கற்று வந்தார். தொடர்ந்து தனது விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் பல தடைகளைத் தாண்டி இன்று அரங்கேற்றம் காணும் நிலையினை எட்டியுள்ளார். இதற்கு துஷாந்தியின் ஊக்கமும் ஆசிரியை மதிப்புக்குரிய காயத்திரி திஷாந்தன் அவர்களின் ஆக்கமும், ஒத்துழைப்பும், விடா முயற்சியும் தான் காரணம். திருமதி காயத்திரி திஷாந்தன் அவர்களின் முதலாவது அரங்கேற்ற நிகழ்வில் எங்கள் மகளும் பங்கேற்பது எமக்கும் பெருமிதமே.
துஷாந்தி ! இவ் நடனக் கலையில் வளர்ச்சி பாதையில் வளர்ந்து தமிழுக்கும், தமிழர் கலைக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகின்றோம். எங்கள் அன்பு மகள் நீண்ட ஆயுளோடும், சகல செல்வளங்களும் பெற்று வாழ வெண்டும் என்று குல தெய்வங்களையும் இஷ்ட தெய்வங்களையும் வணங்கி வாழ்த்துகின்றோம்.
அம்மா, அப்பா, தம்பி.
18.6.2023.
Luzern.
Switzerland.