ஆதியும் அந்தமுமில்லா
அரன் திருநாமம் போற்றியு ணர்ந்து
சோதிக் கனல் புயல் கேசம் படர் பஞ்ச
கிருத்திய நடன கோலம்
நீதி கொள் நெறிகுரு காயத்திரி திஷாந்தன்
குருவென வந்தமைந்த
ஈடில்லா பரததர்சனா நடனாலயம்
வாழ்த்துரை புகழவே !
கற்றலும் கற்றன ஈதலும் கனமதிலே
நற்றவம் என பணிக்காக
சுற்றமும் வாழ்த்த சுகமற் புலம்பெயர்ந்தாலும்
ஐம்புலத்திலும் தாயீழம் மாறாத
பண்பும் மறத்துடன் அறமும்
எம்மவர்க்காக பல்லாயிரம் அன்புக்
கரமும் தரு நல் நடனாலயமே !
தமிழர் வளர்த்த அழகியற் கலை
பரத முனிவரின் பாரம்பரியக் கலை !
சிவபெருமான் ஆடிய தாண்டவக் கலை – கண்
முன்னே இறைவனைக் காட்டும் பக்திக் கலை !
புலத்தில் எட்டுத் திக்கும் பரவட்டும்
உங்கள் சலங்கையொலிகள் !
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு எனவிருந்தும்
கற்றவை கற்றும் கலி தீர்க்கும் நற்றவ
நாதன் நடனம் பயின்று
மற்றவர் துன்பம் மனதிலறிந்து
கன்னி ஊதியம் களத்தில்
கொற்றவன் போல வாழும் மகளே
குலேந்திரநாதன் சகானா
குலேந்திரநாதன் சாருகா
நின் மனவெண்ணம் மலரும் நல் வாழ்வாய்
அரங்கமும் அரன் அருள் பெறவிளங்கும்
வேற்றொரு தேசம் எனினும் உணர்வில்
என்றும் ஈன்றதோர் தாயீழம்
உற்ற நல் உறவுகள் என எண்ணிநிதம்
ஈகையும் இனியவையும்
நற்றவத்தவளாக வாழும் மகளே
லிங்கதாஸ் துஷாந்தி
பெற்றிட்ட கலைநேசம் காயத்திரி
ஆசியுடன் அரங்கமேறி அவணிபுகழ
அரன் நடனமாடவே !
ஆற்றுகை அரங்கமதில் ஐங்கரனும்
அரனோடுறை பார்வதியும்
ஒற்றுமை மாறாத திருவடிகள்
தொம் தோம் என திருநடனம் வாழ்க !
நற்றுணை குருவான திஷாந்தன் காயத்திரி
நல்லாசி கூறி வாழ்த்துரைக்க வாழ்க !
நடனம் பயின்று மனனம் கொண்டு
அரங்கமதில் ஆனந்த திருநடனம்
ஆற்றுகைப்படுத்தும் அன்பு மகள்கள்
குலேந்திரநாதன் சகானா
குலேந்திரநாதன் சாருகா
லிங்கதாஸ் துஷாந்தி மூவரும்
முக்கண்ணர் அருளோடு எப்போதும் வாழ்க !
மாதாவும் பிதாவும் மனமுவர்ந்த உறவும்
தீதில்லா மனத்தவரும் வாழ்த்துரைத்து வாழ்க !
இத்துனைக்கும் ஈன்றெடுத்த
பரததர்சனா நடனாலயம்
வாழ்க வாழ்கவே !
தம்பிமுத்து கேசவநாதன் (தலைவர்)
பரததர்சனம் அறக்கட்டளை
ஈழத்து உறவுகள்