loder

தமிழ் மன்றம் லுட்சேர்ன்

  • Home
  • தமிழ் மன்றம் லுட்சேர்ன்

அரங்கேறும் பரதத்தின் பாதங்களை வாழ்த்தி மகிழ்கின்றோம்
லுட்சேர்ன் தமிழ்மன்றத்தின் வாழ்த்துச் செய்தி

தெய்வீகக் கலையாம் நாட்டியக்கலை. இது பிரமதேவனால் படைக்கப்பட்ட ஐந்தாம் வேதமாக புகழப்படுகின்றது.
இக் கலையை முறைப்படி பயின்று. புலம்பெயர் தேசமான சுவிஸ்சர்லாந்து நாட்டிலும் கலைப்பயணம் தொடரும் ஆசிரியை திருமதி காயத்திரி திஷாந்தன் (பரததர்சனா நடனாலயம் ) அவர்களின் மாணவிகளான செல்வி துஷாந்தி லிங்கதாஸ், செல்வி சகானா. குலேந்திரநாதன். செல்வி சாருகா குலேந்திரநாதன் ஆகியோர் நடனக் கலையை நயம்படப் பயின்று இன்று பரதநாட்டிய அரங்கேற்றம் காணுகின்றனர்.

இவர்கள் தமிழ்மன்றத்தில் முறைப்படி தமிழ்மொழியையும் கற்று தமிழோடு கலையையும் தம் இரு கண்ணென போற்றிப் பயின்றவர்கள். இன்று இவர்கள் காணும் பரத நாட்டிய அரங்கேற்றம் மொழிக்கும் கலைக்கும் கிடைத்த மிகப்பெரும் பேறாகும் பயில்வதோடு மட்டுமன்றி தம் கலைக்கல்வி பிறர்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் எம் சிறார்களின் நிகழ்வுகளுக்கும் பயிற்றுனர்களாக பணிபுரிந்து வரும் எம் மாணவச் செல்வங்கள் மூவரையும் வாழ்த்தி மகிழ்கின்றது லுட்சேர் தமிழ்மன்றம்.

தொடர்க உங்கள் கலைப்பயணம்.

லுட்சேர்ன் தமிழ்மன்றம், கலைப்பிரிவு