






பரததர்சனா நடனாலயம் சுவிஸ்லாந்து
பரததர்சனா நடனாலயம் பரதக்கலையை புகட்டும் கல்விக்கூடமாகவும், தாயகத்து உறவுகளுக்கான வாழ்வாதார பணிகளை செய்யும் அறக்கட்டளை அமைப்பாகவும் இயங்கி வருகின்றது.
இவ் நடனப்பள்ளி! மனித மாண்புகளை மதித்து, பல் கலாசார பண்பாடுகளைக் கொண்ட பல் இன மக்கள் இணைந்து வாழும் சுவிஸ்லாந்து நாட்டின் மத்திய பகுதியான லுட்சேர்ன் மாநிலத்தில் தலைமையகத்தை கொண்டு இயங்குகின்றது. சுவிஸ்லாந்து நாட்டுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், இந் நாட்டின் பொதுக் கலாசாரத்தை பின்பற்றியும், வேறு பட்ட பல் கலாசாரத்தை அனுசரித்தும் தமிழர்களின் தனித்துவ அடையாளங்களை கட்டி காப்பாற்றி எமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல அரும்பாடு படுகின்றார்கள். எமது தனித்துவத்தை நிலைநிறுத்துவதற்கு தாய்மொழி, கலை, கலாசாரம், பண்பாட்டு மரபுகள் பேணிக் காக்கப்பட வேண்டும். தமிழர்களின் அடையாளங்களை காப்பாற்றி அடுத்த தலைமுறையினருக்கு கடத்துவது ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும்.

பரததர்சனா நடனாலயத்தின் பணிகள்
பரததர்சனம் அறக்கட்டளை
பரததர்சனம் நிழல்
பரததர்சனம் அன்பில்
ஆசிரியர் –
திருமதி.காயத்திரி திஷாந்தன்
சுவிஸ்லாந்து நாட்டில் கலைஞராகவும், பரத நாட்டிய ஆசிரியராகவும், மற்றும் நடனப்பள்ளி இயக்குனராகவும், பரததர்சனம் அறக்கட்டளை நிறுவனராகவும் தனது தனித்துவத்தை நிலைநிறுத்திக் கொண்டு வருகின்றார். இலங்கையின் யாழ் / கல்வியங்காடு, மானிப்பாயினை பூர்வீகமாகவும் கிழக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் கிராமத்தில் திரு திருமதி. செல்வராஜா கமலாசனி தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். பாடசாலை அதிபராகிய தந்தை தமிழ் மீது கொண்ட பற்றும், பாட்டன் வழி கலையும், இசையும் இணைந்து மிகுந்த நாட்டம் கொண்டமையால் மூன்று வயதிலேயே பரதநாட்டியத்தை கற்பித்தனர்.
1982ம் ஆண்டு தனது முதற் குருவாக திருமதி. இராஜகுமாரி சிதம்பரம்(அம்பாறை) அவர்களிடமும்…
1996 ம் ஆண்டு திருமதி. சுபித்திரா கிருபாகரன் (மட்டக்களப்பு) அவர்களிடமும்…

ஆடல் கலை / பரதம்
ஆதிகால மனிதன் பேசத்தெரியும் முன்பே முகக்குறி, சைகை கைக்குறிகளாலும், உறுப்பசைவுகளாலும் தன் உணர்ச்சியையும் கருத்தையும் வெளிப்படுத்தினான், ஆதலால், மொழிக்கும் இசைக்கும் முன்பிருந்தே நடனம் இருந்ததுடன் மொழியும் இசையும் சேர்ந்து நடனக் கலைக்கு ஒரு வடிவம் தந்தன.
அறுபத்து நான்கு கலைகளில் ஒன்றாக கருதப்படும் நாட்டியக்கலை, தெய்வீகக் கலையாக போற்றப்படுகின்றது. தமிழர் நாட்டிய மரபு தொல்காப்பியர் காலத்தில் அபிநயர் என்னும் கூத்தரால் “அவிநயம்” என்ற பெயரில் எழுதப்பட்டுள்ளது. தமிழர்களின் நாட்டிய கலை பற்றிய விரிவான பார்வையை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் நீங்காத நினைவாக பதியவைத்துள்ளார். மாதவியின் நடன ஆளுமைகள், மேடையின் தோற்றம், உடையலங்காரம் யாவும் விவரிக்கபட்டிருக்கும். இவ்வாறான மரபு வழி வரலாறு கொண்டிருந்தாலும் அந்நிய படையெடுப்பாளர்களால் மரபு வழி அடையாளங்கள் சிதைக்கப்பட்டது.
